பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக 50 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச தெரிவித்துள்ளார்.

இதற்காகப் பேருந்து சாலைகள் தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரதங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, கையிரத திணைக்களத்தின் பிரதிப்பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்