இன்று ஆரம்பமாகிறது ஐ.பி.எல் போட்டிகள்

15 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று ஆரம்பமாகிறது.

குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகமாகியுள்ள நிலையில் இம்முறை தொடரில் பங்கேற்கும் அணிகள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதிக தடவை ஐ.பி.எல். கிண்ணத்தை வென்ற அணிகள், அதிக முறை இறுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள் என்ற அடிப்படையில் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கெப்பிட்டல்ஸ், லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். எதிர்பிரிவில் உள்ள 5 அணிகளில் 4 அணிகளுடன் தலா ஒரு முறையும், தங்களுக்கு நிகரான அணியுடன் மட்டும் 2 முறையும் மோத வேண்டும்.

அதாவது ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளன.

லீக் சுற்று முடிவில் முதல் 4  இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னரான பிளே-ஓஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு 7.30 க்கு ஆரம்பமாகவுள்ள முதல் போட்டியில் நடப்பு சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.