இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-மூதுர் நிருபர்-

புனித ரமழான் நோன்பு காலத்தில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நோன்பு துறக்கும் இப்தார் வைபவம் நேற்று புதன் கிழமை மாலை தோப்பூர் அல்-ஹம்றா மத்திய கல்லூரியில் மாவட்ட அரசாங்க அதிபரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

இதன் போது புனித ரமலான் மாதத்தின் அர்த்தத்தை மௌலவி அல்ஹாஜ் பஸல் அவர்கள் இரு மொழிகளிலும் சிறந்த முறையில் தெளிவுபடுத்தினார்.

இதில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.சமிந்த ஹெட்டியாராச்சி முதன்மை அதிதியாக கலந்து சிறப்பித்தார். விளக்கமளிக்கையில், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு மதங்களின் போதனைகள் நல்ல அடித்தளமாக அமைகின்றன என்றார்.

ஏனைய அதிதிகளாக சர்வ மத தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தன்மை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்