இந்தியாவை வீழ்த்துவது உறுதி: ஷாஹீன் அப்ரிடி

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறினால், அவர்களை வீழ்த்துவோம் என அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் இந்தியா இதுவரை இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்றும் அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்போது பாரப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாங்கள் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று, ஆசியக் கிண்ணத்தை வெல்வதற்காக இங்கே வந்துள்ளோம் எனவும் எந்த அணி வந்தாலும், நாங்கள் அவர்களை வீழ்த்த தயாராக உள்ளோம் எனவும் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார்.