இந்தியாவில் நிலநடுக்கம்

இந்தியா, அசாம் மாநிலம் நகோன் மாவட்டத்தில் இன்று நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

பூமிக்கு அடியில் 35 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய புவி நடுக்கவியல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த மாதத்தில் நகோன் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.