இந்தியாவில் எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் 8 மாத குழந்தைக்கு உறுதி

பெங்களூரில் 8 மாத குழந்தைக்கு எச்.எம்.பி.வி (HMPV) வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சீனாவில் எச்.எம்.பி.வி வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பெங்களூரில் உள்ள 8 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அந்த குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குழந்தைக்கு எந்த பயண வரலாறும் இல்லை என்றும், இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை சீனாவில் பரவி வரும்எச்.எம்.பி.வியின் அதே திரிபு இது தானா என்பதும் தற்போது வரை தெளிவாக தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்