இந்தியாவிற்கு திருப்பி விடப்படும் இலங்கை விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத அனைத்து விமானங்களும், இந்தியாவின் திருவனந்தபுரம் அல்லது கொச்சி விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.