இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும்

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

முன்னதாக, இந்திய பொருட்கள் மீதான வரியை இறுதிசெய்து கடந்த ஜூலை 30 அறிவித்தார் ட்ரம்ப்.

அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும் அத்துடன் அபராதமாக கூடுதல் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் அபராதமாக கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள், இராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதே மேற்கண்ட கூடுதல் வரி விதிப்புக்கு வித்திட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.