இந்திய உயர்ஸ்தானிகருடன் கடற்றொழில் அமைச்சர் விசேட சந்திப்பு!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா க்கும் இடையிலான முக்கிய சந்திப்பு இன்று கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் மீனவர் நலன், கடல்வள பாதுகாப்பு, கடற்றொழில் துறை அபிவிருத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மீனவர்கள் கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்திற்குப் பிறகு பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் மீன்பிடித்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.