இந்திய அணி அபாரம் – நான்காம் நாள் ஆட்டம் நிறைவு

இந்திய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று  திங்கட்கிழமை நடைபெற்றது.

இதன்படி போட்டியில் 121 ஓட்டங்கள் என்ற நோக்கி தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டினை இழந்து 63 ஓட்டங்களை பெற்றது.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சில் இந்திய அணி 518 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, மேற்கிந்தியத் தீவுகள் அணி 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதனை தொடர்ந்து follow on முறையில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தமது இரண்டாவது இன்னிங்சில் 390 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது,

இந்தநிலையில் இந்திய அணிக்கு வெற்றிபெற இன்னும் 58 ஓட்டங்கள் தேவையாக உள்ளது.

போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.