
இந்த வருடத்தில் 230,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்
இந்த வருட காலப்பகுதியில் 230,000 இற்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளதாக, பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பயிற்சித் திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளருமான ஜி.எஸ்.யாப்பா தெரிவித்துள்ளார்.
ஜப்பானிலும் இலங்கை தொழிலாளர்களுக்கு பல வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.