இசை நிகழ்ச்சியில் சீருடையுடன் நடனமாடிய கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம்
பேலியகொட பகுதியில் இசை நிகழ்ச்சியின் மேடையில் சீருடையில் நடனமாடியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்ய நேற்று திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
களனி பியகமவிலுள்ள விளையாட்டரங்கொன்றில் கடந்த 30ஆம் திகதி இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போதே இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மேடையில் ஏறி பாடகர் ஒருவரின் பாடலுக்கு நடனமாடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்