இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார்.

மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று லண்டன் – வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெற்றது.

முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் பலர் வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு வருகை தந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையில் இருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயம் வரை முடிசூட்டு விழாவின் ஊர்வலம் இடம்பெற்றது.

மன்னர் மூன்றாம் சார்லசும், அவரது மனைவி கமீலாவும் 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் இராணுவ வீரர்கள் புடைசூழ ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

வீதியோரம் கொடியுடன் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மன்னர் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தைச் சென்றடைந்ததும் முறைப்படி மன்னர் முடிசூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன.

700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின்நின்று கொண்டு கேண்டர்பரி ஆர்ச் பிஷப் மன்னர் சார்லசை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

இராணுவ இசைக் கருவிகள் இசைக்கப்பட்டது.

அதன்பின், மன்னர் மூன்றாம் சார்லஸ் சட்டத்தையும், இங்கிலாந்து தேவாலயத்தையும் காப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்