ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து : 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 17 சிறுவர்கள் உட்பட 73 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான்-ஈரான் எல்லையில் உள்ள இஸ்லாம் காலா என்ற நகரத்துக்கு அருகில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றே பாரவூர்தியொன்றுடனும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடனும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பேருந்து சாரதியின் அதிகப்படியான வேகம் மற்றும் அலட்சியமே இந்த விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்
விபத்தில் பேருந்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததுடன், ஏனைய வாகனங்களில் பயணித்த இரண்டு பேரும் பலியானதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.