ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்த தம்பதியினர் கைது
ஆபாச வலைத்தளங்களில் அசிங்கமான வீடியோக்களை பதிவேற்றம் செய்த குற்றத்திற்காக,
மிரிஹானை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினரால் ஒரு திருமணமான தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது ராஜகிரிய – வெலிக்கடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 37 மற்றும் 36 வயதுடைய சந்தேக நபர்கள், முறையே ஒரு மென்பொருள் பொறியாளர் மற்றும் ஒரு உளவியல் ஆலோசகர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தம்பதியினர் சம்பந்தப்பட்ட வலைத்தளத்தில் 334 வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பாகன மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
