ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டம் ஆனைவிழுந்தான் கிராம கல்வாரி தேவாலயத்தின் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் ஏற்பாட்டில், சிறுவர் தினம் நேற்று செவ்வாய்க்கிழமை, பூநகரி கௌதாரி முனை கடற்கரைப் பகுதியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்கள், ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
அதன் பின்னர் பல்வேறு கலைநிகழ்வுகள் நடத்தப்பட்டு, குழந்தைகள் மகிழ்ச்சியுடன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.