ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விமானங்களை வாங்க ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது

அதிக பயணிகளை சுமந்து செல்லக் கூடிய அகலமான விமானங்களை வாங்குவதற்கான முந்தைய அரசாங்கத்தின் அமைச்சரவை முடிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா தெரிவித்துள்ளார்

தேசிய விமான நிறுவனத்தின் விமானக் குழுவிற்கு அதிக அகலமான விமானங்களை வாங்க பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, சரத் கணேகோடா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது இரண்டு விமானங்களையாவது விமானக் குழுவில் சேர்க்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போதியளவு விமானங்கள் இல்லாததால், தற்போது தேசிய விமான நிறுவனம் இலாபகரமான வழித்தடங்களுடன் இணைக்க முடியவில்லை என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் விளக்கினார்.

“பெய்ஜிங்-கொழும்பு, நைரோபி-கொழும்பு போன்ற லாபகரமான வழித்தடங்களுடனும், ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவுடனான இணைப்புகளுடனும் எங்களால் இணைக்க முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தது இரண்டு விமானங்களையாவது விமானக் குழுவில் சேர்க்கத் திட்டம் உள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனது புதிய ஏர்பஸ் ஏ330-200 இன்று புதன்கிழமை வரவேற்ற பின்னர் இது 8 ஆண்டுகளில் நாட்டிற்கு வரும் முதல் அகலமான விமானமாகும் என சரத் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

புதிதாக வாங்கப்பட்ட ஏர்பஸ் ஏ330-200 இன்று பிரான்சில் இருந்து கொழும்புக்கு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதும் சம்பிரதாய நீர் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தற்போது ஸ்ரீலங்கன் விமானக் குழுவில் 23 விமானங்கள் உள்ளன, அவை 10 அகல-உடல் விமானங்கள் மற்றும் 13 குறுகிய-உடல் விமானங்கள்.

புதிய விமானம் ஒரு பிரெஞ்சு நிறுவனத்திடமிருந்து 08 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது, இந்த ஒப்பந்தம் நீடிக்கப்படலாம் என்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.