ஆசியக்கிண்ணம் 2023 : இன்று மோதுகின்றன இந்தியா – பாகிஸ்தான் அணிகள்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் 3 ஆவது ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று சனிக்கிழமை  மோதுகின்றன.

 

2019 உலகக் கிண்ண போட்டிக்குப் பிறகு இதுவரை இந்தியா 57 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் 29 ஒரு நாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியிருக்கிறது. அதிலும் 12 ஆட்டங்களை இந்த ஆண்டில் ஆடியிருக்கிறது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இதுவரை 132 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் 73 ஆட்டங்களிலும், இந்தியா 55 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 4 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை.

கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆண்டு அக்டோபரில் T20 உலகக் கிண்ண போட்டியில் மோதின. அதில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

கண்டியில் உள்ள பல்லேகல மைதான ஆடுகளம், தொடக்கத்தில் பேட்டிங்கிற்கு சாதகமானதாக இருந்து, ஓவா்கள் கடந்த பிறகு ஸ்பின் பௌலிங்கிற்கு சாதகமானதாக மாறும் தன்மையுடையது.

சனிக்கிழமை மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவதால் நாணய சுழற்சியை வெல்லும் அணி சேஸிங்கை தோ்வு செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், டிஆா்எஸ் திருப்புமுனையாக அமையலாம்.

இந்த மைதானத்தில் இதுவரை 33 ஒரு நாள் ஆட்டங்கள் விளையாடப்பட்டுள்ள நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய அணி 14 ஆட்டங்களிலும், சேஸிங் செய்த அணி 18 ஆட்டங்களிலும் வென்றுள்ளன.

ஒரு ஆட்டத்தில் மட்டும் முடிவு எட்டப்படவில்லை.