ஆசியக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறுமா பாகிஸ்தான்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் கைகுலுக்காதது தொடர்பான சர்ச்சை வெடித்ததை அடுத்து, போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்டை “உடனடியாக நீக்க வேண்டும்” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் மேலாளர் மொஹ்சின் நக்வி கோரியுள்ளார்.

நாணய சுழற்சியின் போது பாகிஸ்தான் அணித்தலைவர் சல்மான் அலி ஆகாவை இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவுடன் கைகுலுக்க வேண்டாம் என்று பைக்ராஃப்ட் அறிவுறுத்தியதாகக் கூறி, சர்வதேச கிரிக்கெட் பேரவையில் மொஹ்சின் நக்வி முறைப்பாடளித்துள்ளார் .

குறித்த உத்தரவு ஐசிசி நடத்தை விதிகளை மீறுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியது.

இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்ற பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க முயன்றனர்.

ஆனால் இந்திய அணி வீரர்கள் கைகுலுக்க மறுத்து வெளியேறினர் .

இந்தநிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன், பாகிஸ்தான் அணி அவமதிக்கப்பட்டதாக உணர்ந்ததாக கூறினார்.

இந்த சம்பவம் குறித்து இந்தியா பகிரங்கமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இதன்படி பைக்ராஃப்ட் போட்டி குழுவிலிருந்து நீக்கப்படாவிட்டால், ஆசியக் கிண்ண தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் விலகுவதற்கான “அதிக வாய்ப்பு” இருப்பதாக ஒரு மூத்த பாகிஸ்தான்