அவுஸ்திரேலியா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள்

 

இந்திய அணி அவுஸ்திரேலியா வுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகின்றது.

இதில் ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும், டி20 தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இந்தநிலையில் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது.

இதற்கமைய சூர்யகுமார் யாதவ், பும்ரா, திலக் வர்மா , ஷிவம் துபே, துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோர் அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ளனர்.