அவுஸ்திரேலிய தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்

 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டில் இந்திய மகளிர் அணியின் துடுப்பாட்ட வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் குறித்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் சுகவீனமடைந்துள்ளது இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.