அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் பாப் சிம்ப்சன் காலமானார்!

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் பயிற்றுவிப்பாளருமான பாப் சிம்ப்சன் (Bob Simpson) காலமானார்.

அவர் தமது 89 ஆவது வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

1957 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 சதங்கள், 27 அரைச்சதங்கள் உட்பட 4,869 ஓட்டங்களைப் பெற்றார்.

29 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணித் தலைவராகவும் இருந்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், அவர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும், முழு நேரப் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்.