அவகேடோ பழம் நன்மைகள்
🟩🟨🟫அவகேடோ பழம் பட்டர் ஃபுரூட் என்று அழைக்கப்படும். இதில் நல்ல கொழுப்புக்கள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆய்வுகளிலும் இப்பழம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதில் சிறப்பான பழம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
🟩🟨🟫அவகேடோ பழத்தை அப்படியே சாப்பிடுவதை விட, மில்க் ஷேக் போட்டு குடித்தால் அற்புதமாக இருக்கும். இங்கு அந்த அவகேடா என்னும் வெண்ணெய் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
🥑அவகேடோ பழத்தை தொடர்ந்து டயட்டில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் குறையும். மேலும் இது உடலில் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கும்.
🥑அவகோடா பழத்தில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் அடங்கியுள்ளது. நம் உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் சி சத்துக்கள் கிடைக்கின்றது. குறிப்பாக இந்த பழத்தில் வைட்டமின் பி 6 நிறைந்து இருக்கிறது. வைட்டமின் பி 6 அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.
🥑கருவுற்ற பெண்கள் இந்த அவகோடா பழத்தை தாராளமாய் சாப்பிடலாம். அவகோடா பழத்தில் போலிக் எனும் வைட்டமின் அதிகமாக உள்ளது. இந்த போலிக் வைட்டமின் தாயிற்கும் வயிற்றில் இருக்கக்கூடிய குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக உள்ளது.
🥑அவகோடா பழத்தில் “Lutein” மற்றும் “Zeaxanthin” அடங்கியுள்ளது. இவை இரண்டும் நம் கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. நாம் வெளியில் வெயிலில் செல்லும்போது நம் கண்களின் மீது கதிர்வீச்சுகள் படாதவாறு இருக்க இந்த அவகோடா பழம் உதவியாக உள்ளது.
🥑இப்பழத்தில் உள்ள ஒலியிக் அமிலம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு சிறுநீரக பிரச்சனைகளும் வராமல் இருக்க, அவகேடோ பழத்தை அடிக்கடி உட்கொண்டு வாருங்கள்.
🥑அவகேடோ பழத்தில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, அதனால் செல்கள் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரும் வாய்ப்பைத் தடுக்கும்.
🥑அவகேடோ பழம் உங்கள் அன்றாட உணவில் ஒரு நல்ல கூடுதலாகும். மேலும், அவகேடோ பழத்திலிருந்து தயாரிக்கப்படும் ஏராளமான சுவையான உணவுகள் உள்ளன. தினமும் அவகேடோ சாப்பிடுவதால் பல இருதய நன்மைகளைக் கொடுக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு வெண்ணெய் பழத்தை உட்கொள்வது எல்.டி.எல் அல்லது மோசமான கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. ஆகவே, அவகேடோ பழம், ஆலிவ் எண்ணெய், நட்ஸ்கள் மற்றும் மத்தியதரைக் கடல் உணவில் செய்வது போலவே இதயத்தையும் பாதுகாக்கும் என்று கூறலாம்.
🥑அவகோடா பழத்திலுள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்னைகளை சரிசெய்வதாக ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே எலும்புகள் வலிமையடைகின்றன.
அவகேடோ பழம் நன்மைகள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்