அழிந்து மஞ்சல் நிறமாக மாறிய விவசாய நெற் பயிர்ச் செய்கை

திருகோணமலை தம்பலகாமம் கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட நெற் செய்கை விவசாய நிலங்கள் சீரற்ற கால நிலை காரணமாக வெள்ள நீரில் மூழ்கி மஞ்சல் நிறத்தில் காட்சியளிப்பதுடன் அழுகிய நிலையில் வயல் நிலங்கள் காணப்படுகின்றதனால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் விதைத்து ஓரிரு வாரங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகவும் கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறந்ததனால் தம்பலகாமம் பிரதேச கரிக்கட்டை மலையாற்றுவெளி வயல் நிலப் பகுதியில் உள்ள சுமார் 573 ஏக்கர் வயல் நிலங்களும் சம்மாந்துறை வெளியில் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாதிப்பு தொடர்பில் மீண்டும் நெற் செய்கையின் போது விதைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது ஜீவனோபாயமாக விவசாய செய்கையே விளங்குகிறது எனவும் அழிந்து போன வயல் நிலங்களுக்கான நஷ்ட ஈடுகளை பெற்றுத்தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் கோரிக்கை விடுக்கின்றனர்.