அளுத்கம – போகமுவ விபத்து

பெம்முல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி வீதியின் அளுத்கம, போகமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச்சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து, எதிர்திசையில் வந்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வெயாங்கொடை, கட்டுவஸ்கொட பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பெம்முல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.