அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனையில் பயிற்சிக் கருத்தரங்கு

கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பயிற்சிக் கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிக் கருத்தரங்கில் அலுவலக சிற்றூழியர்கள், சாரதிகள் என 70 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம் பிரதம வளவாளராக கலந்துகொண்டு அலுவலக பணியாளர்களின் அரச கடப்பாடுகள், பொறுப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பாக விரிவுரை நிகழ்த்தினார்.

இப்பயிற்சிக் கருத்தரங்கில் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் அண்மையில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெற்றவர்களும் கலந்துகொண்டர்.

பயிற்சிக் கருத்தரங்கு