அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல்கள் மற்றும் செய்திகளை புதுப்பித்தல் தற்காலிகமா இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அணுகும் பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு பணிப்பாளர் நாயகம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்