அரச வாகனங்களுக்கு ‘டிஜிட்டல்’ எரிபொருள் அட்டை!

அரச நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிப்பதற்காக புதிய ‘டிஜிட்டல் அட்டை’ (Digital Card) முறைமையை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த திட்டம் முதற்கட்டமாக ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமான வாகனக் கூட்டமைப்பில் ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த டிஜிட்டல் அட்டை முறைமையானது, இலங்கை வங்கி (Bank of Ceylon) மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றின் இணைந்த ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விநியோகத்தில் மனிதத் தலையீடுகளைக் குறைத்தல், வெளிப்படைத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ஒன்லைன் வங்கி முறை (Online Banking) மூலம் எரிபொருள் கொடுப்பனவுகளை இலகுவாக மீளப்பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

ஜனாதிபதி செயலகத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முதற்கட்டத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஏனைய அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் இந்த முறைமையை விரிவுபடுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.