“அரகலய” செயற்பாட்டாளர்கள் கேட்ட இளம் தலைவர் நாமல் தான் – மகிந்த ராஜபக்ஷ
தேசத்தை வழிநடத்தும் இளைஞனை விரும்பும் ‘அரகலய’ செயற்பாட்டாளர்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற மஹிந்த ராஜபக்ஷ, தேசத்தின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கும் அவர்களுக்கு உதவுவதற்கும் ஒரு இளம் தலைவர் தேவை என்றும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அத்தகைய இளம் தலைவர் என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இளைஞர்களின் ஆதரவைப் பெற்று எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டுவார், என தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வெளியேறிய சில உறுப்பினர்கள் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் எனவும், அவர்களை கட்சியில் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அழைப்பு விடுப்பதாகவும், மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்