அம்பன் நீர்நிலையில் பல இலட்சம் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு
-யாழ் நிருபர்-
நன்னீர் மீன்பிடியாளர் தொழில் மேம்பாடு கருதி வடமாகண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவினரால் நன்னிர் மீன் குஞ்சுகள் விடப்பட்டன
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் களப்பு பகுதியில் 75,000 மீன் குஞ்சுகள் இன்றைய தினம் விடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவின் நிதி அனுசரணையில் குறித்த மீன் குஞ்சுகள் அம்மன் பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 500 வரையான நன்னீர் மீன்பிடியாளர்களின் தொழில் மேம்பாட்டினை கருத்தில் கொண்டு 250m000 மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தின் கீழ் 75m000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.
மிகுதி மீன் குஞ்சுகள் இன்றிலிருந்து தொடர்ச்சியாக நன்னீர் ஏரியில் விடப்படவுள்ளன.
இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாm வடக்கு மாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி பிரிவு அதிகாரிகள்m பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரயந்த அமரசிங்கm அம்பன் நன்னீர் மீன்பிடியாளர் சங்க பிரதிநிதிகள்இ மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்