
அமைச்சர் குடை பிடித்துக் கொண்டு தேசிய கொடி ஏற்றியது தவறா?
-யாழ் நிருபர்-
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குடை பிடித்தவாறு தேசியக்கொடி ஏற்றியமை விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குடையை பிடித்தவாறு தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.
தேசியக் கொடி ஏற்றுகின்ற போது, அதற்குரிய கௌரவம் வழங்கப்பட வேண்டும், ஆனால் முன்மாதிரியாக செயற்பட வேண்டிய அமைச்சரே இவ்வாறு தேசிய கொடியை ஏற்றியுள்ளார், என விமர்சனங்கள் உருவாகியுள்ளது.
