அமெரிக்காவில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை தற்போது தபால் மூல வாக்களிப்பு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் இரு வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து வொஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.