அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட ‘குஷ்’ அடங்கிய பார்சல் மீட்பு : ஒருவர் கைது
அமெரிக்காவில் (அமெரிக்கா) இருந்து அனுப்பப்பட்ட னுநளஅழளவயஉhலய டிipinயெவய என அழைக்கப்படும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான ‘குஷ்’ அடங்கிய பார்சல் மீட்கப்பட்டுள்ளது.
விமான பாசல் சேவை மூலம் அனுப்பட்ட குறித்த பாசலை சேகரிக்க கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு வந்த 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சனிக்கிழமை சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுப் பொருட்கள் என்ற போர்வையில் ஒரு பார்சலில் போதைப்பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரியவருகின்றது.
குறித்த பார்சலில் 1.3 கிலோ குஷ் இருந்ததுள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ. 20 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு 14 இல் வசிக்கும் குறித்த சந்தேக நபர், மேலதிக விசாரணைகளுக்காக விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.