அமெரிக்காவின் நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்
அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலமாகியுள்ளார்.
நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.
மேலும், அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.