அபிவிருத்திக்கு எந்த நேரத்திலும் நிதியொதுக்க தயார் – ஜனாதிபதி
மக்களுக்கு அவசியமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு எந்த நேரத்திலும் நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற மொனராகலை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஏற்படும் தாமதங்களைத் தடுத்து, அவற்றின் நன்மைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மக்களுக்கு வழங்குவது மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்என்றும் ஜனாதிபதி
சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்படும்போது, அது நிறைவடையும் வரை இலக்கு மயப்பட்ட திட்டத்தை அவர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் உரிய நேரத்தில் நிறைவு செய்யப்படவில்லை.இந்த ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் உரிய நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.