
அனர்த்த நிலைமையால் இன்னும் 95 வீதிகளில் போக்குவரத்து தடை!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வீதிகளில் இன்னும் 95 வீதிகள் தடைபட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) தெரிவித்துள்ளது.
இந்த வீதிகளை சுத்தம் செய்யும் பணிகள் அடுத்த சில நாட்களுக்குள் நிறைவடையும் என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் விமல் கண்டம்பி தெரிவித்தார்.
அனர்த்த நிலைமை காரணமாக மொத்தம் 256 வீதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. பொறியியல் குழுக்கள் சேதங்களைச் சரி செய்வதிலும் தடைகளை அகற்றுவதிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
மேலும் அனர்த்தம் காரணமாக 20 பாலங்களும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
