அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

தற்போது நிலவும் அடர்ந்த மூடுபனி நிலைமை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்தவாறு பயணிப்பது அவசியமாகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வாகனத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மிதமான வேகத்தில் பயணிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.