அதிவேக நெடுஞ்சாலைகளில் தற்காலிகமாக கட்டணமின்றி பயணிக்க அனுமதி

 

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் தற்காலிகமாக கட்டணமின்றி பயணிக்க அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகன நெரிசலைக் குறைக்கவும் அவசர பயணங்களுக்கு ஆதரவளிக்கவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கட்டணம் அறவிடுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த அறிவித்தல் வரை இந்தச் சலுகை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் சில பகுதிகளில் பாதிப்புகள் இருக்கலாம் என்பதால், அதிக எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.