அதிர்ச்சியில் டெஸ்லா
இலோன் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் டெஸ்டா “Model Y” காரை அறிமுகம் செய்தது.
இதற்கான முன்பதிவு அதிக அளவில் இருக்கும் என மஸ்க் எதிர்பார்த்தார்.
இருப்பினும் சுமார் 600 கார்கள் மட்டுமே இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் சுமார் 25 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் டெஸ்லா காரின் விலை 69.75 இலட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.
அதிக விலை மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றால் முன்பதிவ மந்த நிலையை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
வருடத்திற்கு 2500 கார்களை இறக்குமதி செய்ய டெஸ்லா தீர்மானித்துள்ளது.
ஷாங்காயில் உள்ள டெஸ்லா தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த மாதத்திற்குள் 300 முதல் 500 கார்கள் மும்பை, டெல்லி, புனே, குருகிராம் போன்ற நகரங்களுக்கு இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பின் வரி விதிப்பால் 2025-ன் முதல் இரண்டு காலாண்டில் பிரீமியர் மின்சார கார்களின் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.
உலகளவில் 51,000 டொலர் முதல் 79,000 டொலர் வரையிலான கார்கள் வெறும் 2800 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.