அதிகரிக்கும் முச்சக்கர வண்டி திருட்டு
கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் திருடப்படுவது குறித்துக் கடந்த சில நாட்களாக தமக்கு அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் மட்டும் மேல் மாகாணத்தில் 10 உந்துருளிகளும் 3 முச்சக்கர வண்டிகளும் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விசாரிக்க விசேட விசாரணைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், உதவி காவல்துறை அத்தியட்சகருமான எஃப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
