அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை இன்று எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெப்பமான காலநிலையின் போது அதிகளவு நீர் மற்றும் நீர் ஆகாரங்களை அருந்துமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
இதேநேரம் வெப்பமான காலநிலையின் அதிக நேரம் ஓய்வெடுக்குமாறும் அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.