அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த நிறுவனத்துக்கு அபராதம்!
அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட 70 ரூபாய் குடிநீர் போத்தலை 200 ரூபாய்க்கு நுகர்வோருக்குக் குறித்த நிறுவனம் விற்பனை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் ரூபாய் 500,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.