அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பு : ஒருவர் அடித்துக் கொலை!

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட ஒருவரை அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று, இந்தியாவில் பதிவாகியுள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.

அதிக ஒலியை எழுப்பிய விதமாக பாடல் கேட்ட சம்பவம் தொடர்பில் ஆரம்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து மீண்டும் ஏற்பட்ட வாக்குவாத்தின் போதே, நபர் ஒருவர் மற்றுமொருவரை தாக்கியதில் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்