அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

வத்தளை, திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இனந்தெரியாத நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

35 மற்றும் 40 வயதுடைய 05 அடி 06 அங்குல உயரமும் கொழுத்த உடல் அமைப்பு கொண்ட ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவர் நீல நிற டெனிம் காற்சட்டை அணிந்திருப்பதாகவும், கருப்பு பெல்ட் அணிந்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.