அடுத்த 36 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.