அஜித்குமார் குடும்பத்திற்கு விஜய் ஆறுதல்!
பொலிஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அஜித்குமார் குடும்பத்திற்கு ரூ. 2 இலட்சம் நிவாரணமாக அவர் வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இதன்போது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது அவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.