அகில இலங்கை கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டட திறப்பு விழா

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயந்தி நகர் பகுதியில் அமைந்துள்ள அகில இலங்கை கம்பன் கழகத்தின் கவிச்சக்கரவர்த்தி கம்பன் முன்பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் கம்பன் கலை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

இக்கட்டிடத்தொகுதியில் மாணவர்கள் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ள கூடிய வகையில் கோயில் கட்டிடம் மற்றும் மாணவர்கள் தங்கும் விடுதி, வழிபாட்டுதலம் என அமையப்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் யாழ் மாநகர ஆனையாளர் த.ஜெயசீலன் மற்றும் கவிப்பேரரசு கம்ப பாரதி ஜெயராஜ், த.முகுந்தன், உடுவில் பிரதேச செயலாளர் ச.ஆ.பாலேந்திரன், கம்பன் கழகம் கொழும்பு மற்றும் சீ.வி.கே .சிவஞானம் ௮. வேலமாலிதன் மற்றும் சமயத்தலைவர்கள், கம்பன் கழக அறநெறி மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். அத்ருடன் அறநெறி ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்