அகல் விளக்கு ஏற்றுவதன் மகிமைகள்

இயற்கையாகக் கிடைக்கும் கழி மண்ணை கொண்டு செய்யப்பட்டவை தான் அகல் விளக்கு. இந்த அகல் விளக்கானது நமக்கு மிகவும் பயனுள்ள பலன்களையும் தத்துவங்களையும் தருகிறது.

🪔அகல் விளக்கு ஆனது சூரிய பகவானை குறிக்கிறது. அதில் ஊற்றப்படும் நெய் அல்லது எண்ணெய் போன்ற திரவங்கள் சந்திர பகவானை குறிப்பிடுகிறது. அதில் போடப்படும் திரியானது புதன் பகவானை குறிக்கிறது. விளக்கு ஏற்றிய பின் எரியும் சுவாலை செவ்வாய் பகவானையும், சுவாலையின் நிழலானது ராகு பகவானையும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் நிறமானது குரு பகவானையும், விளக்கு தீபம் அணைந்து முடிந்த பின் கிடைக்கும் கரியானது சனி பகவானையும் தீபத்திலிருந்து பரப்பும் வெளிச்சம் கேது பகவானை குறிப்பிடுகிறது.

🪔அகல் விளக்கு தீபத்தில் எரிந்து முடிந்த பின் கிடைக்கும் கருமை நிற சாம்பலை சனி பகவானாக நினைத்து நெற்றியில் தரித்தால் நம்மைப் பிடித்த பீடைகள், தரித்திரங்கள் அனைத்தும் ஒழியும். எப்பொழுதும் வீட்டின் நிலை வாசலில் குலதெய்வம் குடியிருப்பதால் அங்கு இரண்டு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தால் அவர்களின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

🪔அகல் விளக்கில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளது. நவக்கிரக தோஷங்கள் நீங்க அகல் விளக்கு தீபத்தை கோவில்களில் ஏற்றி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். மேலும் விளக்கு ஏற்றும் பொழுது நவக்கிரக மந்திரங்களை உச்சரித்து ஏற்றினால் சகல சௌபாக்கியங்களும் உண்டாகும். தோஷங்கள் நீங்க மிக சிறந்த பரிகாரம் அகல் விளக்கு தீபம் ஏற்றுவது.

இப்படி அகல் விளக்கை பற்றிய கருத்துக்கள் புராதன நூல்களிலும் சாஸ்திரங்களில் குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளன எனவே அகல் விளக்கு தீபத்தை சரியான முறையில் ஏற்றினால் அனைவரினது வாழ்விலும் இறைவனது பரிபூரணமான சக்தியையும் வாழ்வில் நல் ஒளியையும் பெற்று கொள்ளலாம்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24