வங்கிப் பிழை : சூரிச் நகர வங்கியால் இரட்டிப்பாக செலுத்தப்பட்ட சம்பளம்

சூரிச் மாநில வங்கியானது தனது வங்கி ஊடாக ஏனைய சூரிச் நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இருமுறை வழங்கியுள்ளது.

சூரிச் மாநில வங்கியானது இன்று திங்கட்கிழமை பிற்பகல் விடுத்துள்ள செய்தி அறிக்கை ஒன்றில் தனது வங்கி ஊடாக கணக்குகளை வைத்திருந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இம்மாதம் வழங்கப்பட்ட சம்பளம் இருமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தொழில்நுட்ப செயலாக்கப் பிழைதான் காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்ப செயலாக்கப் பிழையின் விளைவாக, பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் இரண்டு முறை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மேலதிகமாக வழங்கப்பட்ட சம்பளத்தை திருப்பி செலுத்த வேண்டிய கடமை இதனை பெற்றுக் கொண்ட நிறுவன ஊழியர்களுக்கு உள்ளதாகவும் வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் அதிகமாக 175 மில்லியன் பிராங்குகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தொகையை மீள செலுத்துவதற்கான இலகுவழி தீர்வைக் ஆராய்ந்து வருவதாகவும் வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.