பேருந்தில் பெண்ணின் கால்களை படம் பிடித்த இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

பொரளை பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை, கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட இளைஞன் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, இளைஞனுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷன கெக்குனவெல, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 1,500 ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், குற்றம் சாட்டப்பட்ட தெமட்டகொடையைச் சேர்ந்த குறித்த இளைஞனுக்கு கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இச்சம்பவம் கடந்த வருடம் பொரளை பகுதியில் இடம்பெற்றது.

சந்தேநகநபரான குறித்த இளைஞனை கைது செய்ய பொலிஸார், பொதுப்போக்குவரத்துகளில் பெண்களுக்கு இது போன்ற துன்புறுத்தல்கள் இனிவரும் காலங்களில் நிகழாதிருக்க, கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு தக்க தண்டனை வழங்குமாறு நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.